
முள்ளுக்கும் வலித்திருக்கும்
உம் தலையில் கிரீடமாக சூட்டப்பட்ட போது...
உம் தலையில் கிரீடமாக சூட்டப்பட்ட போது...
மரத்திற்கும் வலித்திருக்கும்
சிலுவையாக செய்யப்பட்டு நீர் சுமந்த போது...
சிலுவையாக செய்யப்பட்டு நீர் சுமந்த போது...
நிலத்திற்கும் வலித்திருக்கும்
உம் பட்டு பாதம் தள்ளாடி நடந்த போது...
இரும்பும் உருகியிருக்கும்
உம் பட்டு பாதம் தள்ளாடி நடந்த போது...
இரும்பும் உருகியிருக்கும்
ஆணியாக உம் மீது அறையப் பட்ட போது..
கல்லும் கசிந்திருக்கும்
உம் புனித இரத்தம் பட்டுத் தெறித்த போது....
கல்லறையும் அழுதிருக்கும்
உயிரற்று நீர் உள்ளே வைக்கப் பட்ட போது...
உயிரற்று நீர் உள்ளே வைக்கப் பட்ட போது...
சிருஷ்டி மொத்தமும் துடித்திருக்கும்
நீர் அனுபவித்த பாடுகளை பார்த்த போது...
நீர் அனுபவித்த பாடுகளை பார்த்த போது...
ஏன் மனிதனுக்கு மட்டும் இன்னும் புரியவில்லை
அத்தனை வலியும் அவனுக்காகத் தான் நீர் அனுபவித்தீர் என்று?
அத்தனை வலியும் அவனுக்காகத் தான் நீர் அனுபவித்தீர் என்று?
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
[ 'துதி மலர்' செப்டம்பர் 2002 - மாத இதழில் வெளியிடப்பட்டது]
13 comments:
Even after reading this if humans dont understand, then they r not fit to be humans(one of the fine creation of GOD in GOD'S One Image).
Its really superb.
Good. It was very good, I just did not know u cld go so poetic. Pl carry on.
Superb..After reading it, for sometime I could not think of anything else. Very nice. Do continue.
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
- சகாரா.
// கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... //
உங்களின் இந்த கேப்ஷன் என் மனதை என்னென்னவோ செய்கிறது.
- சகாரா.
//ஏன் மனிதனுக்கு மட்டும் இன்னும் புரியவில்லை
அத்தனை வலியும் அவனுக்காகத் தான் நீர் அனுபவித்தீர் என்று?//
மனிதம் மறந்துவிட்ட மனிதனிடம்
மனிதம் பற்றி பேசி பயனில்லை.
நல்லவேளை கர்த்தர் அன்றே சிலுவையில் மரித்தால்...இப்பொழுது இருந்திருந்தால் குண்டுகளுக்கு இரையாகியிருப்பார்.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் தோழி.
இந்த கவிதை ஏனோ கண்களில் கண்ணீரை வரவைத்தது
உன் பயணம் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்.
பாராட்டப்படுதல்
இத்தனை இனிப்பாய் இருக்கும் என
இதற்கு முன் தெரியாது எனக்கு.
நன்றி நிலா ரசிகன்!
நன்றி சகாரா!
akka rombe nalla yeludiyirukka. nee sonna andha manidhanil naanum adakkam. naeriya nerum indha vishayam enaku marandhu poruyirudhu. you made me to sit n think. good work.
Nithya, It is too good.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நித்யா
மனிதனாய் வாழ மதம் போதும் மனசாட்சி தேவையில்லை என்று நினைப்பதால், மனிதன் எதையும் நினைப்பதில்லை...
நல்ல சிந்தனை...
தினேஷ்
அனைத்துப்பதிவுகளும்
மிகவும் அருமை!!
மனதை இனிமைப்படுத்தியது!!
மனதைத் தூய்மைப்படுத்தியது!!
மனதைப் பக்திப் பாதையில் பதியப் சொன்னது!!!
மனதை இயற்கையை,இறையை,
குழந்தையை அனைத்தையும்
ரசிக்கச் சொன்னது!!
ரட்சிக்கச் சொன்னது!!
தேவன் கிருபை இதயத்தில் நிரம்பி வழியட்டும்!!!
Post a Comment