அஞ்சலி...20.2.2008
உதிரும் இலைகளின் மரணத்திற்காக
நிற்பதில்லை பூமியின் சுழற்சி.

நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்.

ஆனால்,
நான் நிற்கிறேன் இங்கு
உ. .தி. .ர். .ந். .த. . மலரே,
உனக்கு அஞ்சலி செலுத்த.

வாழ்ந்த நிமிஷங்களிலெல்லாம்

மகரந்தங்களால் வாசனை தூவி,

கூம்பியிருந்த மனங்களை மலர்த்தி,

நசுக்கியவருக்கும் நறுமணம் ஈந்து,


உன்னத பணி செய்கிறோம்
என்ற பெருமை சிறிதுமின்றி,

படைத்தவரின் நோக்கம்
பிறழாமல் நிறைவேற்றி,

மகிழ்ச்சியாய் மரித்தாயோ...
நறும் பூவே,

நீ ஒன்றும் மண்ணில் வீழ்ந்திடவில்லை
மற்றுமொரு சருகாய் மாறிவிட...

என்னைப் போலவே
உன்னை நேசிக்கும்
ஆயிரமாயிரம் மனங்களில்
விழுந்திருக்கிறாய் விதையாக.

மீண்டும் முளைத்திடுவாய்,
உனைப்போல் வாழும் ஆசையை
துளிர்க்கச் செய்வாய்,
என்றென்றுமாக வாழ்ந்திருப்பாய்,

வாடாத நினைவாக...


கசியும் விழிகளுடன்,
JC நித்யா.

10 comments:

mehala Feb 26, 2008, 6:25:00 PM  

Nithi...

Kavithai megavum arumai... Kavithai Varikal D.G.S.Dhinakaran Avarkalai Nenai vutukirathu...

Vallthukal un malarku...

Anbudan.. Mehala

sathish Feb 26, 2008, 6:35:00 PM  

வார்த்தகளில்லை என்னிடம்!

//
நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்.
//

நிதர்சனம்!

வாடாத நினைவுகள் தான் எத்துனை அழகு இல்லையா நித்யா!

அதிகம் கசிய வேண்டாம் இங்கே நீர்துளிகளும் விதைகளாகிவிடுகின்றன!

விஜய் Feb 26, 2008, 8:35:00 PM  

"உதிரும் இலைகளின் மரணத்திற்காக
நிற்பதில்லை பூமியின் சுழற்சி.

நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்"

அருமையான வரிகள்.

அன்புடன்,
விஜய்.

sathish Feb 28, 2008, 7:35:00 PM  

தாங்கள் என் பதிவிற்கு வருகை தந்து நாட்களாகிவிட்டதென நினைக்கிறேன். சற்று தடம் பதித்து சென்றால் மகிழ்வேன்!

- சதீஷ்

ரசிகன் Mar 1, 2008, 2:50:00 PM  

//உதிரும் இலைகளின் மரணத்திற்காக
நிற்பதில்லை பூமியின் சுழற்சி.

நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்.//

அடடா..அருமை..:)

JC Nithya Mar 3, 2008, 3:13:00 PM  

நன்றி Sathish!!!

தடம் பதிவதில்லையே தவிர
வராமல் இல்லை. ரசிக்காமல் இல்லை.

JC Nithya Mar 3, 2008, 3:14:00 PM  

நன்றி ரசிகன் !!!

sathish Mar 3, 2008, 7:16:00 PM  

நன்றி நித்யா :)

vaishnavi Apr 11, 2008, 4:35:00 PM  

வாடா நினைவுகளுடன்
வாழும் கவிதையே!!!
வார்த்தைகள் உன்னுள் வெடித்து சிதறுகின்றன..
வார்த்தையின் வீரியம் அதன் வலிகளில் தெரிகிறது...

உரத்து சொல்கிறேன்... தோழியே... உன் தேடல் தொட்டு விடும் தூரம் தான்...

வாழ்த்துக்களுடன்..
உன் தோழி
உன் வார்த்தைகளின் ரசிகை..

JC நித்யா Apr 15, 2008, 2:15:00 PM  

நன்றி Vaishu!!!

மிக அழகான
உன் வார்த்தை பிரயோகம்
கண்டு வியந்தேன், இனியவளே.

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.