
நீரில் நனைந்த வெற்றுத்தாளென
கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும்
ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு
நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான
உனது கவிதையை.
பூவின் இதழ் ஒன்றையும் சிதறடிக்காமல்
சுகமாய் நனைக்கும் செல்ல மழை போல
இதமாய் தூறுகிறாய் நாள்முழுவதும்
எனது கனவுகள் ஒன்றையும் பிய்த்திடாமல்.
கருவாகி உருவான விதையை
ஒரு நாளும் பார்த்திராத செடி போல
சந்திக்காமலேயே பிரிந்திருத்தலும்
பார்க்காமலேயே சேர்ந்திருத்தலும்
சாத்தியம் என்றாக்கிவிட்டு
புன்னகைக்கிறாய் சிறு பூவென.
விரிந்த அந்த வானத்தின் கிழிசல் வழியே
என்றாவதொருநாள் உன் முகம் தெரிந்திடும்
என்ற ஒரு சொட்டு நம்பிக்கையிலேயே
எரிந்து கொண்டிருக்கிறது
இந்த சின்னஞ்சிறு தீபம்
இன்னமும்...
~.~. JC நித்யா ~.~.
6 comments:
ஒவ்வொரு வரியும் அருமை :)
ஆழ்ந்த அமைதி இழையோடும் கவிதை!
உங்கள் காத்திருப்பு விரைவில் பலன் அளிக்க என் வாழ்த்துக்கள்..
சுகமான வரிகள்..
Thai'n Prasava Valiyil irukum sugam pola,
Kathirukum Valiyum Sugam Thann Allava...
Valiyai Sugamai Yetru Kollvom , inbam tharum Kulanthai pola :)
ஆழ்ந்த அமைதியை உணர்ந்ததற்க்கு நன்றி Sathish!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி Ananda!!
காத்திருப்பின் சுகத்தை
மூன்றே வரிகளில் அழகாய்
சொன்னதற்க்கு நன்றி Mehala!!!
Hi Nithya,
May the love hidden deep inside your heart find the love waiting in your dreams. May the laughter that you find in your tomorrow wipe away the pain you find in your yesterdays.
That's so sweet of you Priya. Thanks a lot!
Post a Comment