...என்ன இது?
கூட்டை கலைத்து
பறக்க பழக்கும்
தாயின் பயிற்சி முறையா?
கூட்டை கலைத்து
பறக்க பழக்கும்
தாயின் பயிற்சி முறையா?
மலர்களால் வேயப்பட்ட
இதமான இந்த கூட்டிலிருந்து...
சுகமான உனது சிறகுகளின்
அரவணைப்பிலிருந்து...
பசிக்கத் துவங்கும் முன்பே
உணவு ஊட்டும்
உனது அக்கறையிலிருந்து...
புதைந்திருந்த காயங்களைக் கூட
தேடித் தேடி மருந்திட்ட
உனது பரிவிலிருந்து...
விட்டு விலகி
எங்கு போகச் சொல்கிறாய்?
தனியாய் பறந்து திரிதலும்
தானாய் உணவு தேடலும்தான்
வளர்ச்சிக்கு அடையாளமென்கிறாய்.
அதிர்ந்து போகிறது மனம்.
இன்னும் சில காலம்
உனது சிறகுகளிலேயே
தூக்கி சுமந்திட மாட்டாயா?
ஏங்குகிறது நெஞ்சம்.
உயிர் வளர்த்த தாய்மையே,
எனக்கான எல்லாமும்
நீயாக இருக்கிறாயே.
எதை மட்டும் பிரித்து
எடுத்துச் செல்வது
"நான்" என்று பெயரிட்டு ???
~.~. JC நித்யா ~.~.
15 comments:
மெல்லிய ஏக்கம் படர்ந்த வரிகள் நித்யா.
வலியின் ஒலி காதுமடல்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
- சகாரா.
Nalla kavithai.
கவிதை என அழைக்கப்படும்
தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை.
என்றாலும், நன்றி!
கவிதை நன்று. நான் இரசிக்கும் பதிவேடுகளில் உங்களதும் ஒன்று
நன்றி Sathish!!!
எனது சில முயர்ச்சிகளை பற்றிய தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
un thedalil ennaiyum serthukkol,
enrum natpudan
un rasigai
//தனியாய் பறந்து திரிதலும்
தானாய் உணவு தேடலும்தான்
வளர்ச்சிக்கு அடையாளமென்கிறாய்.
அதிர்ந்து போகிறது மனம்.//
பறக்க பயம் இருக்கலாம்
அதற்காக பறக்காமலே
இருக்க முடியாதல்லவா? :)))
மேலும் கவியுங்கள் நித்தியா :)))
Thaniyai parandu thiridalum,
Thanai unavu thedudalum, enbadu
valarchiku adaiyalam mattum-alla
anubavmum, munnetratirkumkooda!
aei kaviye
ni parandu siragadikirai
adai nan rasikinren.
மிகவும் சரி நவீன் ப்ரகாஷ்.
ஆனால்,
சிறகு ஒடிந்து விடக்கூடாதா
என ஏங்க வைக்குமளவு
சுகமான கூடு என்னுடையது.
உணர்வுகளுக்கு வர்ணம் பூசும் உன் கவிதைகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம்
அன்புடன்,
விஜய்.
Very good Kavithai...good writeup..
when u start writing all these stuffs? listen i dont like,okay? seriously:)
Nandri Remu!!
Nandri Remu!!
Post a Comment