"ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!"இந்த தொடர் ஓட்டத்தில் எழுத அழைத்த Sathish க்கு என் நன்றி!
எனது மொத்த பதிவுகளே 5 தானே Sathish!
இதில் எதை குறிப்பிடுவது? :)
ஏதோ ஒரு வலி நேரத்தில் எழுதப்பட்டது தான் ஒவ்வொன்றுமே.

எந்த தேடல் என்னை வாழச் செய்கிறதோ
எந்த தேடல் என்னை வளரச் செய்கிறதோ...

எந்த தேடல் என்னை எரியச் செய்கிறதோ
எந்த தேடல் என்னை எரித்துக் கொண்டிருக்கிறதோ...

எந்த தேடல் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கியதோ
எந்த தேடலில் நான் முற்றிலும் தொலைந்து போகிறேனோ...

அதைப் பற்றி எழுதியதே நான் நேசிக்கும் ஒன்று.

இந்த தேடல் தான் என் சுகம்.
இந்த சுகம் தான் என் வலி.
இதுவே நான்.

கை நீட்டும் குழந்தையை
பிடித்துக் கொள்ளும் தாயின் விரல்கள்...

துவண்டு நிற்கும் கன்றுக்குட்டியைத்
தடவி கொடுக்கும் தாய்ப் பசு...

புழுதிச் சாலையில் செல்லும் பேருந்திற்குள்
ஒரு சில நிமிடங்கள் வந்து சென்ற வண்ணத்துப்பூச்சி...

சரிவிகிதத்தில் ஈரமும் இதமும் கலந்து
சில்லென்று முகத்தில் மோதிச் செல்லும் காற்று...

கவனிக்க யாருமில்லை எனினும்
ஆனந்தமாய் புன்னகைக்கும் காட்டுப் பூக்கள்...

நேற்று பெய்த மழையில் குளித்ததினால்
மகிழ்ச்சியோடு சிரித்திருக்கும் இலைகள்...

இப்படி எதெதிலோ
.உ.ன்.னை.
தேடிக் கொண்டிருக்கும்
நான்...4 comments:

sathish Feb 11, 2008, 6:39:00 PM  

//கவனிக்க யாருமில்லை எனினும்
ஆனந்தமாய் புன்னகைக்கும் காட்டுப் பூக்கள்...//
எத்தனை உண்மை! மனம் இதை முழுமையாய் உணர்ந்துவிடில் வருத்தங்கள் ஏது!!

அழைப்பை ஏற்றதற்கு மிக்கநன்றி நித்யா :)

தேடல் இல்லாது வாழ்வில் சுகமில்லை
தேடல் தரும் வலி இல்லாது பலனுமில்லை

உங்களின் தேடல் தொடரட்டும். தேடல் ஒரு முடிவை தருவதை காட்டிலும் தொடரும் அற்புத பயணமாக இருப்பது அழகல்லவா!

ரசிகன் Feb 16, 2008, 12:53:00 PM  

அருமையா இருக்கு நித்யா.. வலிகளை மட்டுமல்ல.. சந்தோஷங்களையும் பகிர்ந்துக் கொள்வதே நிறைவைத் தரும்.. அதனால மகிழ்ச்சியான தருணங்களையும் பதிவு செய்யுங்களேன்:)..

JC Nithya Feb 19, 2008, 8:35:00 PM  

//தொடரும் அற்புத பயணமாக இருப்பது அழகல்லவா!//

உண்மை Sathish!
அற்புதங்களே என் பயணமாய்...

JC Nithya Feb 19, 2008, 8:36:00 PM  

மிகவும் சரி ரசிகன்!
நிச்சயமாக சந்தோஷங்களையும் பதிவு செய்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.