
வேறெதற்கும் உபயோகிக்காமல்
உனக்கென்றே கோர்த்து வைத்த
நட்சத்திர சொற்கள்.
உயிர்மலரும் பொற்பொழுதில்
பூப்பதற்கென்றே காத்து நிற்கும்
பார்வை அரும்புகள்.
சிறிதளவும் சிந்திவிடாமல்
உனக்கென்றே சேர்த்து வைத்த
இதழோர புன்னகைகள்
கனவு மெய்ப்படும் தேன்நிமிடத்தில்
கசிவதற்கென்றே தேக்கி வைத்த
விழியோர நீர்த்துளிகள்.
பத்திரமாய் சேமிக்கிறேன்.
என் உயிர் பொக்கிஷமே,
உனை சந்திக்கும் மழை நாளுக்காக...
~.~. ஜெ.சி. நித்யா .~.~
5 comments:
மழை நாள் விரைவில் பொழியட்டும்..
வரிகள் அழகு :)
இனிய கிறித்துமஸ் வாழ்த்துக்கள் :)
நன்றி sathish...ஒவ்வொரு முறையும் தவறாமல் இடும் பின்னூட்டத்திற்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும்... :)
Wishing you best of luck for that DAY!!
Thank you dear Shirley :) ..though that doesnt involve 'luck' actually :)
Post a Comment