Friday, April 11, 2008

வழிபாடு




சுவாசமாய் சூழ்ந்து
நினைவெங்கும் நிறைந்து
உலகமாய் விரிந்து
உயிரெங்கும் கலந்து
உதிரத்தையே உணவாக்கி
தரும் தாய்மையில் நனைந்து

உலகத்தினின்று முற்றிலும் துண்டிக்கப்பட்டு
கவலைக்கான காரணம் தொலைத்து


இனிமைகளை தவிர வேறேதும் அறியாது
தானென்ற நினைவு ஏதும் இல்லாது

தனது இருப்பை தவிர வேறெதையும் தெரிவிக்காது
இயல்பாய் இசைக்கும் மௌனத்தில் கரைந்து

தாயின் கருவறைக்குள்
சுகமாய் சுகமாய்
துயிலும் குழந்தை
போல

எனதினிய ஆலயமே,
உனக்குள் நான்.

என்னை சிருஷ்டித்தவரை
நினைத்துக் கொண்டு...


~.~. JC நித்யா ~.~.

3 comments:

sathish said...

//இனிமைகளை தவிர வேறேதும் அறியாது
தானென்ற நினைவு ஏதும் இல்லாது
//
ஏனோ இரசித்தேன் அதிகமாய் இவ்வரிகளை :)

அருமை நித்யா!

சகாராதென்றல் said...

//தாயின் கருவறைக்குள்
சுகமாய் சுகமாய்
துயிலும் குழந்தை
போல //

மீண்டுமொரு முறை கருவறையின் கதகதப்பை உணர வைத்த வரிகள்

JC Nithya said...

நன்றி Sathish, சகாரா !!