வறட்சி பிரதேசம்

கடும் பசியில் வயிறு எரிந்தாலும்

சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக
யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும்
அந்த சின்னஞ் சிறு குழந்தையை
நான் கண்டு கொள்ளாமல் நகரும் போது...

கல்லூரி கேண்டீனில்
குளிர் பானங்களை எடுத்து கொடுத்து விட்டு
எங்களையும் எங்கள் சுடிதார்களையும்
தாகத்தோடு பார்க்கும்
அந்த ஏழைச் சிறுமியின் பார்வையை
நான் நாசூக்காய் தவிர்க்க முற்படும் போது...

பேருந்து நிலைய வாசலில்
வீங்கிப் போய் விகாரமாயிருக்கும்
தனது கால்களை காண்பித்து
ஏதாவது கேட்கும்
அந்த மனிதனைப் பார்த்து
"அய்யோ பாவம்" என்று
நான் முகத்தை திருப்பிக் கொள்ளும் போது...

வெட்கப் படுகிறேன்.
சுகமாயிருக்கும் இந்த
எனது நிலை குறித்து.

வலியுணர்கிறேன்.
ஈரமற்ற இயந்திர வாழ்க்கையில்
வறட்சி பிரதேசமாய்
மாறிப் போன
எனது மனதை நினைத்து.

"பசியாயிருந்தேன்,
நீங்கள் எனக்கு போஜனங்கொடுக்கவில்லை.
தாகமாயிருந்தேன்,
நீங்கள் என் தாகத்தை தீர்க்கவில்லை.
வியாதியாயிருந்தேன்,
நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை.

மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு
நீங்கள் எதை செய்யாதிருந்தீர்களோ
அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்."
( பைபிள்: மத்தேயு 25:42-45)


~.~.  ஜெ.சி.  நித்யா ~.~.8 comments:

Unknown Oct 29, 2007, 10:00:00 PM  

I know you are in guilty.

I tell you real, now only you are earning, so you can lead as you like. So don't be confused.

Jesus knows you better than you.

Pray for them.

காஞ்சனை Oct 31, 2007, 5:42:00 PM  

இந்த மாதிரியான பல சமயங்களில் நானும் வெட்கப்பட்டிருக்கிறேன், ஒன்றும் செய்ய இயலாத‌ என் இயலாமையை நினைத்து...

- சகாரா.

ரசிகன் Nov 7, 2007, 11:37:00 PM  

நல்லாயிருக்கு. நித்யா..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

JC Nithya Nov 13, 2007, 1:39:00 PM  

நன்றி ரசிகன்!

Unknown Nov 16, 2007, 6:14:00 PM  

அன்பு தோழியே

உன் அமைதிக்குள் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு கவி இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்க உன் கவி மயம். வளர்க உன் கவி ஆற்றல். வாழ்த்துக்கள் :)

Unknown Nov 16, 2007, 6:29:00 PM  

நித்யா,
முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களிடம் இப்படி ஒரு திறமை இருக்கும் என்று நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஒரு சில கவிதைகள் நமக்குள் ஒரு உற்சாகம் கொடுக்கும், சில கவிதைகள் நம் மனதை இதமாய் வறுடும், சில கவிதைகள் நமக்குள் சென்று ஏதோ செய்யும். உங்களுடைய இந்த படைப்பு மூன்றாம் வகை. என் மனதை மிகவும் பாதித்தது. உங்களுடைய இப் பாதை தொடர என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
ஜனனி.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish Dec 23, 2007, 9:22:00 AM  

இன்று மீண்டும் ஒருமுறை உங்களின் இந்த கவிதையை படிக்க நேர்ந்தது!

இதே எண்ணங்கள் எனக்குள்ளும் உதித்திருக்கிறது... அதை வருவதில்லை என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன்

தினேஷ் Jan 10, 2008, 1:28:00 PM  

உங்கள் கவிதை, நல்ல பொறுப்பான உணர்வுகளை சிந்தனையையும் உணர்ந்துகிறது...

நல்ல மனித நேய பார்வை...

தினேஷ்

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.