எனக்காக உயிரையே கொடுத்து
ஆச்சரியமான ஒளிக்குள் என்னை
அழைத்து வந்து
அழைத்து வந்து
இந்நாள் வரை என்னை வாழ வைக்கும்
என் நேசர் இயேசுவுக்காக
எதுவுமே செய்யவில்லையே
என்ற குற்ற உணர்வு என் நேசர் இயேசுவுக்காக
எதுவுமே செய்யவில்லையே
என்னை எப்போதும் உறுத்துவதுண்டு.
ஆனால் இப்போது கிறிஸ்தவ உலகில் நடக்கும் கூத்துகளை எல்லாம் பார்த்தால்,
கழுத்து வரை பிரச்சனை இருந்தும்
முறிந்து விழாமல்
வாழ்வின் விளிம்பு வரை சென்றும்
எகிறி குதித்து விடாமல்
விரட்டிய பிரச்சனைகளுக்கு மனிதன் காலில் விழாமல்
அச்சுறுத்திய நோய்களுக்கு முன்
அடங்கிப் போகாமல்
விழுங்க நினைத்த பாவங்களுக்கு
விலகியோடி
போராட்டமே வாழ்க்கையானாலும்
சோர்ந்து போய் மனம் கசந்தாலும்
எது வந்த போதும்
அவரையே நோக்கிப் பார்த்து
அவரின் வார்த்தையால் வாழ்ந்து
இயன்ற வரை நேர்மையாய்
அவர் பெயருக்கு களங்கம் வராமல்
முகம் தெரியாத கோடிகளில் ஒருத்தியாய்
அவருக்கு மட்டும் தெரியும்
வாழ்க்கை வாழ்ந்தாலே போதும்
எனத் தோன்றுகிறது._
~.~. ஜெ. சி. நித்யா.~.~
5.11.2026.

